Tuesday, March 20, 2007

FIREFOX இல் TAMIL UNICODE பிரச்சினைக்கு தீர்வு

தமிழ் ஒருங்குறி ஆதரவுப் பொதி ( Tamil unicode support package ) நிறுவப்படாத கணிணிகளில் எழுத்துருக்கள் மாறி மாறி வேறுபட்ட ஒழுங்குகளில் தோற்றமளிக்கும்..
இது எழுத்துக்களை விளங்கிக்கொள்வதை கடினமாக்குவதுடன் எழுதுவதையும் சிரமத்துக்குள்ளாக்குகிறது..
இதற்குத்தீர்வு காணப்பட்டுள்ளது FIREFOX 3.0 Alpha pre பதிப்பில் ஆகும்..

இதனை நீங்கள் http://www.vastdown.com/index.php?newsid=1171575572 இல் இருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும்..
(இந்தப் பக்கத்தில் நீங்கள் ஒரு முறை உங்களை பதிவுசெய்து பயனி பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்(Password) என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்)

எனினும் இது ஒரு முழுமையான இறுதிப்படுத்தப்பட்ட ( finalized) பதிப்பல்ல..
ஒரு சோதனைப்பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது..
பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம் இதில் வழங்கப்படவில்லை..

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழில் தட்டெழுத பயன்படுத்தும் tamilkey extension இதில் தகவற்றது (incombatible)..
எனினும் FIREFOX 3.0 உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்போது அதில் பயன்படுத்தும் தகவுள்ள இற்றைப்படுத்தப்பட்ட( updated) tamilkey extension வெளிவரும் என எதிர்பார்க்கலாம்..

FIREFOX பயன்படுத்துவதில் ஆர்வமுடையவர் எனின் ஒருதடவை முயற்சித்துப்பார்க்கலாமே?

இந்த செயற்திட்டத்தின் பெயர் minefield என்பதாகும் , அதனால் உலாவியின் பெயரும் minefield என்றே தோற்றமளிக்கும்..

1 comment:

Unknown said...

அல்லது தமிழ் Unicode பிரச்சனைக்கு தீர்வுகான

http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help
மேலே உள்ள Link க்கு சென்று மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்