Thursday, March 22, 2007

தமிழில் எழுதுவது எப்படி-2

முதலில் பார்த்தது ஆரம்ப பயிலுனர் ஒருவருக்கு தமிழ் யுனிகோட் பயன்படுத்துவதற்கான தொடக்கம் ஒன்றே தவிர அதனை அன்றாடவாழ்வில் பயன்படுத்த முடியாது..
காரணம் அது அதிக நேர விரயத்தை ஏற்படுத்துவதுடன் பயன்படுத்த கடினமானதும் ஆகும்..

வலைப்பதிவுகளில் எழுதுபவர்களுக்கும் ஜிமெயிலில் தமிழில் அரட்டை அடிப்பவர்களுக்கும் இன்ன பிற தேவைகளுக்கு தமிழ் ஒருங்குறி பயன்படுத்துபவர்களுக்கு பரிந்துரைக்கக்கூடியது tamilkey extension ஐயே ஆகும்..

இதனை பயன்படுத்துவதற்கு நீங்கள் Mozilla Firefox உலாவியை பயன்படுத்த வேண்டும்..

TAMIL KEY EXTENSION ஐ இங்கே பதிவிறக்கவும்:
https://addons.mozilla.org/firefox/2994/

பின்னர் ஒருதடவை உலாவியை மூடித்திறக்க(restart) வேண்டும். (installation complete ஆக)..

பின்னர் எங்கெல்லாம் நீங்கள் தமிழில் தட்டச்ச வேண்டி வருகிறதோ அங்கெல்லாம் ஒரு வலது சொடுக்கலில் கீழே காணப்படும் வகையான menu ஒன்றை பெறுவீர்கள்..

அதில் அஞ்சல் என்பதை தெரிவு செய்யும் போது நீங்கள் வழக்கமான ஆங்கில உச்சரிப்பில் தட்டெழுதுவதன் மூலம் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை பெற்றுக்கொள்ள முடியும்..
அ -a ஆ-aa இ-i ஈ-ii ....
ந-wa ண-Na ன-na
ர-ra ற-Ra
ல-la ள-La ழ-za

வேறு தமிழ் விசைப்பலகைகள் உங்களுக்கு பரீட்சயமாக இருக்குமிடத்து( பாமினி அல்லது தமிழ்99....) அவற்றிலும் தட்டெழுதலாம்..

இங்கு ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் மாற்றிக்கொள்ளும் Keyboard shortcuts ஐ தெரிந்து வைத்துக்கொள்ளல் நன்மை பயக்கும்..
இவை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பதோடு வலது சொடுக்கலில் வரும் menu வில் பார்த்து அறிந்து கொள்ளவும் முடியும்..

இனியென்ன, மனதில் உள்ளதை தமிழில் சொல்ல என்ன தயக்கம்?? :)

உண்மையில் உலாவிகளில் சிறந்ததாக கருதக்கூடியது Portable Firefox ஆகும்.. இதனை pen drive களில் இலகுவாக கொண்டு செல்ல முடிவதுடன், புதிய புதிய Theme களை இலவசமாக பெற்று அடிக்கடி உங்கள் உலாவியின் தோற்றத்தையும் மாற்றிக்கொள்ள முடியும்..
நீங்கள் வைத்திருக்கும் புத்தகக்குறிகள்(bookmarks), நிகழ் புத்தகக்குறிகள்(Live bookmarks/feeds --இது தொடர்பில் விளக்கம் இல்லையாயின் பரவாயில்லை, அது சம்பந்தமாக பின்னர் தெளிவுபடுத்தப்படும்), தேவையான நீட்டிப்புக்கள்(Extensions) எல்லாம் on the go!!

PORTABLE MOZILLA FIREFOX DOWNLOAD:
http://portableapps.com/apps/internet/firefox_portable

புதிய THEME களை பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/themes/

நீட்டிப்புகளை( EXTENSIONS ) பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/extensions/

PLUGINS பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/plugins/

No comments: