Thursday, March 22, 2007

தமிழில் எழுதுவது எப்படி-2

முதலில் பார்த்தது ஆரம்ப பயிலுனர் ஒருவருக்கு தமிழ் யுனிகோட் பயன்படுத்துவதற்கான தொடக்கம் ஒன்றே தவிர அதனை அன்றாடவாழ்வில் பயன்படுத்த முடியாது..
காரணம் அது அதிக நேர விரயத்தை ஏற்படுத்துவதுடன் பயன்படுத்த கடினமானதும் ஆகும்..

வலைப்பதிவுகளில் எழுதுபவர்களுக்கும் ஜிமெயிலில் தமிழில் அரட்டை அடிப்பவர்களுக்கும் இன்ன பிற தேவைகளுக்கு தமிழ் ஒருங்குறி பயன்படுத்துபவர்களுக்கு பரிந்துரைக்கக்கூடியது tamilkey extension ஐயே ஆகும்..

இதனை பயன்படுத்துவதற்கு நீங்கள் Mozilla Firefox உலாவியை பயன்படுத்த வேண்டும்..

TAMIL KEY EXTENSION ஐ இங்கே பதிவிறக்கவும்:
https://addons.mozilla.org/firefox/2994/

பின்னர் ஒருதடவை உலாவியை மூடித்திறக்க(restart) வேண்டும். (installation complete ஆக)..

பின்னர் எங்கெல்லாம் நீங்கள் தமிழில் தட்டச்ச வேண்டி வருகிறதோ அங்கெல்லாம் ஒரு வலது சொடுக்கலில் கீழே காணப்படும் வகையான menu ஒன்றை பெறுவீர்கள்..

அதில் அஞ்சல் என்பதை தெரிவு செய்யும் போது நீங்கள் வழக்கமான ஆங்கில உச்சரிப்பில் தட்டெழுதுவதன் மூலம் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை பெற்றுக்கொள்ள முடியும்..
அ -a ஆ-aa இ-i ஈ-ii ....
ந-wa ண-Na ன-na
ர-ra ற-Ra
ல-la ள-La ழ-za

வேறு தமிழ் விசைப்பலகைகள் உங்களுக்கு பரீட்சயமாக இருக்குமிடத்து( பாமினி அல்லது தமிழ்99....) அவற்றிலும் தட்டெழுதலாம்..

இங்கு ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் மாற்றிக்கொள்ளும் Keyboard shortcuts ஐ தெரிந்து வைத்துக்கொள்ளல் நன்மை பயக்கும்..
இவை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பதோடு வலது சொடுக்கலில் வரும் menu வில் பார்த்து அறிந்து கொள்ளவும் முடியும்..

இனியென்ன, மனதில் உள்ளதை தமிழில் சொல்ல என்ன தயக்கம்?? :)

உண்மையில் உலாவிகளில் சிறந்ததாக கருதக்கூடியது Portable Firefox ஆகும்.. இதனை pen drive களில் இலகுவாக கொண்டு செல்ல முடிவதுடன், புதிய புதிய Theme களை இலவசமாக பெற்று அடிக்கடி உங்கள் உலாவியின் தோற்றத்தையும் மாற்றிக்கொள்ள முடியும்..
நீங்கள் வைத்திருக்கும் புத்தகக்குறிகள்(bookmarks), நிகழ் புத்தகக்குறிகள்(Live bookmarks/feeds --இது தொடர்பில் விளக்கம் இல்லையாயின் பரவாயில்லை, அது சம்பந்தமாக பின்னர் தெளிவுபடுத்தப்படும்), தேவையான நீட்டிப்புக்கள்(Extensions) எல்லாம் on the go!!

PORTABLE MOZILLA FIREFOX DOWNLOAD:
http://portableapps.com/apps/internet/firefox_portable

புதிய THEME களை பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/themes/

நீட்டிப்புகளை( EXTENSIONS ) பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/extensions/

PLUGINS பெற்றுக்கொள்ள:
https://addons.mozilla.org/firefox/plugins/

Tuesday, March 20, 2007

FIREFOX இல் TAMIL UNICODE பிரச்சினைக்கு தீர்வு

தமிழ் ஒருங்குறி ஆதரவுப் பொதி ( Tamil unicode support package ) நிறுவப்படாத கணிணிகளில் எழுத்துருக்கள் மாறி மாறி வேறுபட்ட ஒழுங்குகளில் தோற்றமளிக்கும்..
இது எழுத்துக்களை விளங்கிக்கொள்வதை கடினமாக்குவதுடன் எழுதுவதையும் சிரமத்துக்குள்ளாக்குகிறது..
இதற்குத்தீர்வு காணப்பட்டுள்ளது FIREFOX 3.0 Alpha pre பதிப்பில் ஆகும்..

இதனை நீங்கள் http://www.vastdown.com/index.php?newsid=1171575572 இல் இருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும்..
(இந்தப் பக்கத்தில் நீங்கள் ஒரு முறை உங்களை பதிவுசெய்து பயனி பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்(Password) என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்)

எனினும் இது ஒரு முழுமையான இறுதிப்படுத்தப்பட்ட ( finalized) பதிப்பல்ல..
ஒரு சோதனைப்பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது..
பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம் இதில் வழங்கப்படவில்லை..

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழில் தட்டெழுத பயன்படுத்தும் tamilkey extension இதில் தகவற்றது (incombatible)..
எனினும் FIREFOX 3.0 உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்போது அதில் பயன்படுத்தும் தகவுள்ள இற்றைப்படுத்தப்பட்ட( updated) tamilkey extension வெளிவரும் என எதிர்பார்க்கலாம்..

FIREFOX பயன்படுத்துவதில் ஆர்வமுடையவர் எனின் ஒருதடவை முயற்சித்துப்பார்க்கலாமே?

இந்த செயற்திட்டத்தின் பெயர் minefield என்பதாகும் , அதனால் உலாவியின் பெயரும் minefield என்றே தோற்றமளிக்கும்..

Sunday, March 18, 2007

ஒருங்குறி தமிழில் எழுதுவது எப்படி

ஒருங்குறி தமிழ் (Tamil Unicode) எழுத்துருக்களை இலகுவாக தட்டெழுதுவதற்கு பயிலுனர்கள் பயன்படுத்த பரிந்துரைக்கக் கூடியது இலகுவான ஆங்கில ஒலியியல் தழுவிய தட்டெழுதும் முறையையே ஆகும்..
இதில் அதிகம் கடினமில்லாமல் தேவையான தமிழ் இடுகைகளின் ஆங்கில உச்சரிப்பில் தட்டெழுதுவதன் மூலம் அதற்குரிய தமிழ் வெளியீடுகளை பெற்றுகொள்ள முடியும்..

எனினும் தட்டெழுதும் வேகத்தை கவனத்தில்கொள்ளுமிடத்து tamil99 விசைப்பலகை(keyboard) ஐப் பயன்படுத்துவதே சிறந்தது..
எனினும் தட்டெழுதுவதில் ஓரளவு பரீட்சயம் ஏற்பட்ட பின்னர் அதனைப் பயன்படுத்துவது நல்லது..

மேலும் வினைத்திறனுடைய விசைப்பலகை மாதிரிகளை பின்னர் பார்க்கலாம்.
இப்போதைக்கு இந்த முறையை பயன்படுத்தி தெரியாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்..

(இதற்குரிய தொடுப்பு விரைவில் வழங்கப்படும், எமது சேவையகம் (server)தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது)

Thursday, March 15, 2007

Firefox Vs Iinternet Explorer

Internet Explorer 7:- may end up on a slightly higher security-level, and may not add just as much “fun” for the average user as previous versions do. Based on how some of that hightened security will be achieved – by passing site-addresses on to Microsoft(?) for clearance, I don't think I will concider IE7 as anywhere near secure enough for serious use.

Firefox:- has a much better reputation when it comes to built-in security, and seems to keep up a pretty good defense as new and improved versions arrive. Firefox also has the basic preventive measures against unwanted content/junk in place, so fewer annoyances can be expected while surfing.

use firefox Extensions to make easer your work and get more features..
try these...
  1. IE tab:- to get the features from IE(its use for Unicode sides)
  2. downthemAll :- to download files faster
  3. Tamilkey, Adhiyan:- to type in tamil Unicode in chat or mail....
  4. Cooliris Previews:- to see the link pages without click or go into that page
  5. many more..
it is better to use portable firefox on your pen.

Tuesday, March 13, 2007

Introduction

Hi Guys and Gals.
This site has been started to speak about the technical thing among our students.
We will give you some introductions about the new technical stuffs that arise in the present world.
And also you can ask any questions that you have to make clear.
We will come up with various new technology inventions and evolution of existing technologies.
We think this would be very helpful to our students to improve their knowledge.
Thanks.